Rules of Prudence for WP MPs

English | Mandarin | Malay | Tamil

Introduction

1. Congratulations on your election as a Member of Parliament (MP).

2. I thought it appropriate to write to you at this juncture, after you had taken your oath of Parliament and for some of you, after having better familiarized yourselves with the duties and responsibilities of being an elected town councilor.

3. The contents of this letter were drafted with a view to motivate excellence in all the tasks you undertake as a MP. Please keep them close to your heart. Constantly reflect on your public service journey as a privilege that is open to the very few, particularly for those of us who stand with the opposition. I trust you will make the best use of your office and plan assiduously to look back with a sense of achievement and pride years down the road. You will very quickly come to realize, if you have not already, that hard work and self-discipline will be critical to a strong term in office.

A Self-Respecting MP

4. A Workers’ Party MP is a leader and key representative of the Workers’ Party. You must never forget this. Always remember, you are not voted as an independent MP but a flag bearer of the Workers’ Party.

5. When you decided to stand as a candidate for the Party, you signed a declaration. One of its clauses resolved that if you were elected to Parliament, you would place your political work and service to your constituents as a priority. This is a straightforward clause, but your commitment to it will shape your success or failure in your constituency and the Town Council. At the national level, a MP’s Parliamentary oath, found in the Constitution, imposes similar duties and expectations.

6. The truest reflection of your commitment and attitude as a Workers’ Party MP is not found in the number of likes, shares or positive feedback you receive online, but on what you do on the ground and say in Parliament. The Party has established a weekly baseline standard in so far as the minimum ground outreach that is expected of WP MPs including weekly house-visits and separately, walkabouts in your constituency. If you are a first-term MP and seek to anchor the Party’s presence in your constituency, this will have to be supplemented by other constituency-specific work. Much of your efforts come down to your personal commitment and willingness to become a “ground MP” and to reflect the aspirations and apprehensions of your constituents and fellow Singaporeans.

7. A desire to be professional in all your dealings and a willingness to accept scrutiny from the public are critical if you want to make your term in office inspire your best efforts. You will not have the benefit of a grassroots organization funded to the tune of a billion dollars to support your work. Do not be overly burdened by this so much so that you are paralyzed into inaction or worse, underestimate the power of your personal involvement and attention to the constituency. Work the ground with your volunteers. Regularly conduct house visits and walk the shops in your constituency personally. Get to know residents, hawkers and commercial operators. Your constituents do not deserve any less. Most importantly, pay close attention to how you communicate the work of your Town Council to your residents. Do not fall into the trap of passivity, indifference or inertia, or you risk looking back at your term/s as an MP with regret and personal disappointment.

8. In your capacity as a Town Councilor, you are a custodian of public funds. Take great caution and care in this regard and ensure that expenditures incurred are underwritten by proper approval processes and controls, and in compliance with the Town Council Financial Rules. As a ground MP, you will be expected to communicate regularly with Town Council management and staff and, from time to time, with the Town Council’s contractors. Set high standards in your Town Council along with your fellow town councilors. Do be very mindful about the laws covering corruption and do not allow yourself to come under undue influence of any contractor.

Parliament

9. The purpose of a backbencher, regardless of party, is to check the Government of the day.

10. The ruling party will not take defeat lying down as they have made clear they contest elections to win every seat. Their MPs will also be free to scrutinize your position and views in the course of parliamentary debate, as they are entitled to. Expect robust questioning with multiple PAP MPs coming at you with different angles of attack or lines of questioning. A Parliamentary democracy is adversarial by design and you should not expect anything less. In view of the overwhelming numerical superiority of the PAP, expect to have your every word uttered in Parliament scrutinized and cross-referenced with what you or the Party has previously said.

11. Read the Standing Orders of Parliament carefully to determine what sort of questions are permitted. For example, should your opponents’ exhibit a poor understanding of the Standing Orders, do not hesitate to seek the Speaker’s ruling on a point of order. Of course, you can only do this if you are familiar with the Standing Orders in the first place. Question your own motivations as you draft your parliamentary questions and speeches or when you rise to seek clarifications in Parliament. If it is to advance the interest and welfare of Singapore and Singaporeans, proceed fearlessly.

12. Your term in office is a marathon. Consistent performance will count in the final reckoning. Always remember that our political opponents will marshal every resource at their disposal to defeat you at the next elections, or lower your esteem in the public eye at any opportunity, including on social media either directly, or through proxies.

13. You are expected to attend and sit through all sessions of Parliament. You must seek permission from the Party Whip or Deputy Whip for leave in writing if you need to leave in between a parliamentary session. Separately, you must remain in the Chamber if a Bill or motion where you are speaking or have spoken on, is in progress. The Party expects its MPs to be active in Parliament, filing Parliamentary Questions regularly, in addition to speaking up on Bills. Your performance, the quality of your interventions and the regularity of your participation in Parliament will be closely scrutinized by voters.

14. Do read the Parliament (Privileges, Powers and Immunities) Act, especially the relevant provisions on the receipt of gifts. Check with the SG or Chair if in doubt. Familiarize yourself intimately with the Constitution of the Republic of Singapore and the Prevention of Corruption Act.

15. You may be invited to join Parliamentary trips or official trips overseas to represent the Parliament of Singapore or in other official capacities. You are encouraged to do so. Please remember that as a small country, it is important for Singapore to speak with one voice on the international stage. Do confer with Government representatives or your parliamentary colleagues on the national position and check with the SG or Chair if in doubt, or if you are uncomfortable in supporting an official stand.

16. As an MP, you will be invited by foreign embassies or their representatives for formal/informal meetings and discussions. You are required to inform the SG or Chair in writing of all such invitations before accepting them.

Your signature as a WP MP

17. Clear all public speaking and media engagements, and requests for a quote or opinion to the media – be it online or offline – with the Head of the Media Team who will then seek the SG or Chair’s clearance for your participation.

18. Think carefully before you consider speaking in public at the invitation of any organisation or society. Should you choose to accept and the Party has approved your participation, consider your purpose and the key messages you want to leave with the audience. These must conform with the Party stance and seek to promote the Party as a rational, respectable and responsible entity in Singapore politics and reinforce the position of the Workers’ Party as a loyal opposition. Consult the Head of the Media team before accepting any invite for his/her inputs if in doubt. Ask yourself whether the signature of the organisation and/or your participation can be misconstrued, politicized or deemed to be perfunctory. If it can be, it would be politically naïve and even irresponsible to proceed.

19. Do not take your grassroots volunteers for granted and engage with them regularly. It is a reality of politics that you will not be able to confirm the bona fides of people who join the Party’s cause at the first instance. Take guidance from the volunteer’s code of conduct, and on your part, lead by example. While volunteers are likely to be friendly and supportive, they will also look to you for leadership and watch your actions closely – are you more interested in the stature of becoming a MP and more focused on personal aggrandizement? Or are you a genuine ground MP who takes the time and effort to embed yourself in the community and respond promptly to residents’ issues while exercising initiative in addressing problems? For the avoidance of doubt, there is no place in Parliament for a Workers’ Party MP who falls in the former category.

Meet-the-People Sessions and resident communication

20. In the course of your work including meet-the-people sessions, you may meet individuals who highlight deficiencies in government policy. Do not jump to conclusions. You should find out as much as you can about the case in question and exercise judgment in assessing the case. For example, have you sufficiently interrogated the policy reasons behind the issue, can the policy can be improved, do extrinsic reasons explain the matter? etc. These should be some of the thoughts that cross your mind. In some cases, you should also reflect if you or your office are being manipulated as a tool to further the interests of an external cause or interest. Never forget that you serve the interests of Singapore and Singaporeans. Even so, remain open-minded even as you address the matter with empathy, as a Workers’ Party MP must be expected to. Earn the trust of your residents.

21. You will not be able to satisfy all requests. Be straight and honest with your residents without losing your sense of empathy and compassion. If you do not have an answer for a resident, inform him/her that you will check and get back to them. Make sure that you do.

22. In your enthusiasm and commitment to assist a resident or advance any issue, be courteous and professional in your dealings with civil servants and members of the public. You may find yourself writing to office-holders – or to MPs of other parties – to forward a case relevant to them.

Hammer Outreach

23. Hammer sales are a central Party activity that takes place over more than half of all Sunday mornings throughout the year. An MP is expected to participate in this activity and lead members to sell the Party newsletter to members of the public.

Conclusion

24. This letter has been drafted with a view to providing a basic outline that if followed, should give you the foundation for a successful and personally fulfilling term as an MP. No document will be able to capture all the do’s and don’ts of a Workers’ Party MP in a granular way. Nor can the Party provide a manual to ensure you have a successful and fruitful term of office. Your success or failure will ultimately turn on your professionalism, self-discipline and commitment towards your ground efforts and your desire to represent Singaporeans effectively in Parliament.

25. I wish you the very best.

引言
1. 祝贺你当选国会议员。

2. 你们已宣誓就任为国会议员,当中好几位对于管理市镇会的职责和义务也已经相当熟悉,我想在这个时候给你们写信正是一个恰当的时机。

3. 写这封信的目的,是为了激励你们成为优秀的国会议员,出色地执行所有职务。请将这些内容铭记于心,时时反思自己的公共服务历程,提醒自己这是极少数人才能拥有的特权,对于身处在野党的我们尤其如此。我相信你们会在任内竭尽所能做到最好,并坚定勤勉地展开各种规划;乃至多年后回顾,能有一丝成就感与自豪感。你们也很快会意识到,也许有些人早已发现,勤奋工作、高度自律,对成就一个实力强大、表现杰出的服务任期,是至关重要的。

自尊自重的国会议员
4. 工人党议员既是党内的领导者,也是代表人物。请千万别忘了这一点。要永远谨记,你不是作为独立议员被选上的,而是工人党的旗手。

5. 决定代表工人党参选时,你曾经签署过一份宣言。宣言中的其中一项条款决议,一旦当选进入国会,你将把政治工作和为选民服务放在首位。这是一个简单的条款,但是你履行承诺的决心,将决定你在选区和市镇理事会的成败。在国家层面上,宪法中国会议员的宣誓书,也规定了类似的职责和期望。

6. 你身为工人党议员对职责的投入与态度所获得的最真实的反映,并不在于你在网上的帖文收获多少个赞,让人转贴了多少次,听到多少好话;而是你在基层做了多少耕耘,在国会上又如何为民请命。党制定了每周的基线标准:工人党议员的基层接触与推广工作至少必须包括每周一次家访,外加选区访问。如果你是首次当选国会议员,急需进一步奠定工人党在你的选区里的存在感,那你就必须在家访与选区访问之外开展其他特定的选区工作。你愿意付出多少努力,攸关你有多大的信念与意愿,要成为真正的“在地议员”,为选民和全体国人表达心声,反映人们的期待与忧虑。

7. 如果想让任期更加充实,那么请在所有事务中保持绝对专业,并且随时准备接受公众审视。你不会有百万元撑起的庞大基层组织来支援你的工作。可是,也请别因此而过度受困受累,以至自觉无能为力而无所作为,或者更糟糕的是,低估了你个人对选区的亲身参与和关注所能发挥的力量。与义工们一起深耕基层,定期进行家访,亲自走访选区内的商店。多了解居民、小贩、店家。您的选民不该受亏待。最重要的是,向居民有效传达市镇会的工作。不要落入被动、冷漠或惰性的陷阱,否则日后回顾议员任期,必当有所遗憾和失望。

8. 身为市镇会委员,您也是公共资金的保管人。请谨慎小心,确保所有开支经过正规的审批程序和控制,并符合市镇会的财务规则。身为在地议员,你需要定期与市镇会管理层和工作人员沟通,并不时与市镇会的承包商洽谈。与你的市镇会团队一起为市镇会树立高标准。注意与贪污有关的法则,决不让自己受任何承包商所左右。

国会
9. 后座议员的功能,无论党派,是为了对政府发挥制衡作用。

10. 执政党不会轻易认输,他们也已经表明,他们参加选举是为了赢得每个席位。他们的议员同样有资格也必定会在国会辩论中检视你的立场和观点。做好准备面对有力提问与反驳,多位人民行动党议员必定会从各种不同攻击角度或提问方式对你的论点提出质疑。国会民主体制的设计本来就具有对抗性,别指望能轻松过关。也因为人民行动党在人数上具有压倒性的优势,你在国会中所说的每一字每一句都会受到严格检视,并且与你自己或党之前发表过的言论相互参照,揪出任何前后矛盾之处。

11. 仔细阅读国会的议事常规,确定你可以提出什么样的质询。例如,如果你的对手表现出对议事常规不甚理解,请毫不犹豫地要求议长裁决程序问题。当然,前提是你必须先熟悉议事常规。草拟国会提问或演讲稿,或者在国会上要求澄清时,先确认自己的动机。如果出发点是为了促进新加坡和新加坡人的利益和福祉,就请无所畏惧地发言。

12. 你的任期是一场马拉松,请持之以恒,维持一致的表现。时时谨记,我们的政治对手会调动他们所掌握的一切资源,在下一次选举中击败你;或者利用任何机会(包括在社交媒体上),直接或通过第三方贬低你在公众眼中的威望。

13. 你应该出席并参加所有国会会议。如果需要在国会休会期间离开,必须向党鞭或副党鞭获得书面许可。另外,如果你正在发言或已经发言表态的法案或者动议还在进行辩论,你必须留在议事厅内。工人党希望我们的议员在国会中积极发言,针对特定法案发表看法之外,也定期提出质询。你在国会上的表现、发言质量和参与度,都将受到选民的密切审视。

14. 阅读国会《特权、权力和豁免法令》,特别是有关收受礼物的规定。如有疑问,请向秘书长或主席确认。熟悉《新加坡共和国宪法》和《防止贪污法令》。

15. 你可能受邀参加国会访问形成或海外公务旅行,代表新加坡国会或以其他官方身份出席活动。我们鼓励你参与这些活动。请谨记,新加坡是一个弹丸小国,在国际舞台上维持一致立场,是非常重要的。与政府代表或国会同僚商议官方所持的立场;如有疑问,或对于支持官方立场感到不自在,请告知秘书长或主席。

16. 身为国会议员,你可能获得外国大使馆或使馆代表邀请参加正式/非正式的会议和讨论。在接受邀请之前,你必须先以书面形式通知秘书长或主席。

作为工人党议员的定位

17. 对于所有公开演讲和媒体邀约,或者要求引述、作出回应或提出观点,(无论在线或离线),都请先向党内传媒组主席通报,传媒组主席会请示秘书长或主席,征求秘书长或主席批准。

18. 在接受任何组织或社团的公开演讲邀约之前,请慎重考虑。如果选择接受邀约,也获得党的批准,请详加思考自己参与活动的目的,以及想传达给受众的主要信息。这些都必须与工人党的立场一致,有助于推动工人党在新加坡政治环境中作为一个理性、值得尊重并且负责任的政党,并强化工人党作为一个忠诚的在野党的定位。如有疑问,请在接受任何邀约之前咨询传媒组主席。问问自己,你的组织定位和/或你的参与是否可能被误解、政治化或视为敷衍了事。如果有这种可能性,执意接受邀约就是在政治上缺乏智慧,或甚至不负责任。

19. 切勿将基层志愿者的付出视为理所当然。与义工们多接触交流。我们不可能在一开始就确认义工们支持工人党理念的诚意,这是一个政治现实。以《志愿者行为准则》为指引,并且以身作则。虽然志愿者可能很友好也很支持你,但他们也同样期待见识你的领导能力,并且将密切关注你的行为——你更关注的是借议员的身份抬高个人声望,满足个人的虚荣心吗?还是认真地想做一位真正的在地议员,拨出时间心血融入社群,积极主动地解决问题并及时回应居民面对的困难?让我们开门见山说白了:任何工人党议员,如果属于前一种情况,国会里不会有你的容身之地。

会见选民活动,与居民的沟通

20. 在你的日常工作中,也包括会见选民活动,你可能会遇到一些人大谈政府政策的缺陷。避免急于下定论。你应该尽可能多了解相关案例,再作出合理判断。例如,你是否已对问题背后的政策原因进行了充分地调研和思考?这个政策可有任何应该改进之处?外在原因能否解释问题起因等等。这些都应该是你思考的一些问题。在某些情况下,你还应该反思自己或者工作团队是否被操纵,成为某些外部势力或利益集团达到私有目的的工具。永远不要忘记,你是为新加坡和新加坡人民的利益而服务。不过即便如此,也请时时保持开放心态,带着同理心处理各个案例,不辜负公众对工人党议员的期望,赢得居民的信任。

21. 你不可能满足所有居民的要求。因此,在不失去同情心和同理心的情况下,公正坦诚地对待你的居民。如果无法提供一个确定答案,请他/她给你一点时间查询再给予答复。请务必说到做到。

22. 协助居民或处理任何问题时热情投入之余,也请在与公务人员或公众打交道时不失礼貌与专业态度。你会发现自己代居民陈情时,经常需要写信给公职人员或其他政党的议员。

《铁锤报》推广活动

23. 兜售《铁锤报》是我们党内的核心活动,一年到头有超过一半的星期天上午,我们都得在各地售卖《铁锤报 》。工人党议员都应该积极参与这项活动,带领党员向公众推销党报。

结语

24. 这封信的目的是提供一个基本的大纲,只要遵循这份大纲,应该可以帮助你奠定基础,并且成功完成任期、实现理想。没有任何一份文件能事无巨细地涵盖一位工人党议员所有该做和不该做的事。党也无法提供教科书来保障您的成功且充实地完成任期。最终的成败取决于你的自我专业要求、自律精神、深耕基层的承诺与决心,以及你在国会代表新加坡人发声的志向。

25. 祝你一切顺利。

Pendahuluan
1. Tahniah atas kejayaan anda terpilih sebagai Anggota Parlimen.

2. Saya berfikir inilah masa yang paling wajar untuk menulis kepada anda, iaitu selepas anda mengangkat sumpah di Parlimen dan setelah sebilangan daripada anda membiasakan diri dengan tugas dan tanggungjawab sebagai seorang ahli majlis bandaran terpilih.

3. Isi surat ini disusun dengan tujuan untuk memberikan motivasi kepada anda untuk mencapai kecemerlangan dalam melaksanakan tugas sebagai seorang Anggota Parlimen. Sila selami dan fahami setiap baris perkataan dengan baik. Sentiasalah renungkan setiap perjalanan yang anda tempuh sebagai satu peluang yang istimewa kerana peluang ini terbuka kepada orang-orang tertentu sahaja, terutamanya bagi kita di pihak pembangkang. Saya percaya bahawa anda akan melakukan yang terbaik untuk pejabat di bawah kendalian anda dan merancang dengan penuh tekun agar suatu hari nanti anda boleh melihat kembali segala kejayaan yang telah anda kecapi selama bertahun-tahun dengan penuh rasa bangga. Anda akan sedar dengan pantas, jika anda belum menyedarinya lagi, bahawa kerja keras dan disiplin diri merupakan perkara yang penting bagi memastikan penggal pemerintahan yang kuat dalam jawatan anda.

Penghormatan Diri Anggota Parlimen
4. Anggota Parlimen Parti Pekerja adalah seorang pemimpin dan wakil utama Parti Pekerja. Anda tidak boleh lupa perkara ini. Sentiasa ingat bahawa anda tidak dipilih sebagai Anggota Parlimen bebas, tetapi sebagai seorang pembawa bendera bagi Parti Pekerja.

5. Apabila anda memutuskan untuk bertanding sebagai calon Parti, anda telah menandatangani pengisytiharan. Salah satu daripada fasalnya telah mengatakan bahawa jika anda terpilih untuk ke Parlimen, anda perlu mengutamakan khidmat politik dan servis kepada para konstituen anda. Ini adalah fasal langsung, tetapi iltizam anda terhadap perkara ini akan menentukan kejayaan atau kegagalan anda di kawasan undi dan Majlis Bandaran anda. Di peringkat nasional pula, sumpah Anggota Parlimen yang terkandung dalam Perlembagaan menegaskan tanggungjawab dan jangkaan yang serupa.

6. Gambaran sebenar iltizam dan sikap anda sebagai seorang Anggota Parlimen Parti Pekerja tidak ditentukan oleh jumlah suka, perkongsian atau maklum balas yang anda terima di rangkaian talian, tetapi ia ditentukan oleh tindakan yang anda ambil di lapangan dan suara anda di Parlimen. Parti telah menetapkan garis panduan mingguan khas untuk mencapai jangkaan minimum bagi setiap Anggota Parlimen Parti Pekerja termasuklah lawatan rumah mingguan dan secara berasingan, lawatan di kawasan undi Parlimen anda. Sekiranya anda merupakan seorang Anggota Parlimen penggal pertama dan berkeinginan untuk mempertahankan kedudukan Parti di kawasan undi Parlimen anda, penambahan aktiviti-aktiviti khusus di kawasan undi Parlimen anda amat digalakkan. Sebahagian besar usaha anda ini akan berbalik kepada iltizam peribadi dan kesediaan untuk menjadi seorang Anggota Parlimen berakar umbi serta untuk mencerminkan aspirasi dan kefahaman konstituen anda dan sesama warga Singapura.

7. Keinginan untuk bersikap professional dalam setiap urusan anda dan kesediaan untuk diteliti masyarakat adalah penting sekiranya anda ingin menjadikan penggal anda inspirasi terbaik kepada usaha yang anda taburkan. Anda tidak akan dapat bermanfaat daripada organisasi akar umbi dibiaya berjumlah satu bilian dolar dalam sokongan kerja anda. Jangan berasa terlalu terbeban dengan perkara ini sehingga ia melumpuhkan aktiviti politik, menjadikan anda tidak aktif dan lebih buruk lagi, memandang rendah terhadap kekuatan peribadi anda terhadap kawasan Parlimen anda. Laksanakan aktiviti di kawasan pimpinan anda dengan para sukarelawan anda sendiri. Terus lakukan lawatan ke rumah dan kedai-kedai di kawasan pimpinan anda secara peribadi. Kenali penduduk, penjaja dan pengendali komersial di kawasan Parlimen anda. Pengundi anda berhak menerima perkhidmatan yang terbaik. Perkara yang paling penting adalah untuk berikan tumpuan dan perhatian sepenuhnya terhadap menyampaikan mesej mengenai kerja-kerja di Majlis Bandaran kepada penduduk di kawasan anda. Jauhkan diri anda dari sikap pasif, tidak ambil peduli atau inersia, kalau tidak anda akan melihat kembali tempoh kepimpinan anda dengan rasa penuh kesal dan kecewa yang mendalam.

8. Sebagai seorang Ahli Majlis Bandaran, anda juga bertanggungjawab sebagai penjaga dana awam. Berhati-hati dalam hal ini dan pastikan setiap perbelanjaan telah ditaja oleh proses dan kawalan kelulusan yang tepat serta mematuhi Peraturan Kewangan Majlis Bandaran. Sebagai seorang Anggota Parlimen di kawasan anda, anda juga diharapkan dapat berkomunikasi secara berkala dengan pengurusan dan kakitangan Majlis Bandaran dan para kontraktor Majlis Bandaran dari masa ke semasa. Tetapkan piawaian yang tinggi dalam pengurusan Majlis Bandaran anda bersama ahli Majlis Bandaran yang lain. Anda hendaklah berhati-hati dengan undang-undang berkaitan rasuah, dan jangan biarkan diri anda terpengaruh dengan tidak wajar oleh sebarang kontraktor.

Parliamen
9. Tujuan ahli parlimen backbencher, tanpa mengira parti, adalah untuk memeriksa Pemerintah hari ini.

10. Parti pemerintah tidak akan duduk diam dengan kekalahan mereka, kerana mereka telah pun menyatakan bahawa mereka bertanding untuk memenangi setiap kerusi dalam setiap pilihan raya. Anggota Parlimen mereka juga bebas untuk memerhatikan kedudukan dan pandangan anda semasa sesi perbahasan di Parlimen, sebagaimana mereka. Jangkakan situasi soal-jawab yang mantap dengan beberapa orang Anggota Parlimen Parti Tindakan Rakyat (PAP) yang akan menyerang anda dari setiap sudut dengan pelbagai soalan berkaitan topik perbincangan. Demokrasi berparlimen adalah bercorak seteru (adversarial) dan jangkaan anda perlulah tidak kurang daripada tahap ini. Dalam keunggulan berangka PAP yang luar biasa ini, setiap perkataan dan ucapan anda di Parlimen dijangka akan diteliti dan dirujuk dengan jelas seperti yang telah dinyata oleh Parti atau anda sebelumnya.

11. Baca Peraturan Tetap Parlimen dengan teliti untuk mengetahui jenis soalan yang izin untuk diajukan dalam sesi persidangan Parlimen. Misalnya, sekiranya Parti lawan anda menunjukkan tanda-tanda kurang memahami Peraturan Tetap Parlimen, janganlah teragak-agak untuk meminta keputusan Tuan Speaker mengenai masalah tersebut. Sudah semestinya anda hanya boleh melakukan perkara ini sekiranya anda sudah terbiasa dengan Peraturan Tetap. Bertanyalah kepada motivasi diri anda sendiri ketika anda menulis draf untuk soalan dan ucapan anda di Parlimen atau semasa anda bangun dari kerusi untuk mendapat penjelasan ketika sesi perbahasan di Parlimen. Sekiranya soalan anda tersebut adalah untuk kemajuan dan kesejahteraan Singapura dan warga Singapura, teruskanlah tanpa rasa takut.

12. Tempoh jawatan anda adalah bersifat maraton. Prestasi yang konsisten akan diambil kira dalam pengiraan akhir. Sentiasa ingat bahawa Parti lawan akan menggunakan setiap sumber yang mereka mampu peroleh untuk menjatuhkan dan mengalahkan kita pada pilihan raya yang akan datang, atau untuk rendahkan martabat diri anda di khalayak pada setiap peluang, termasuklah di laman media sosial, sama ada secara langsung atau melalui proksi.

13. Anda diharapkan untuk menghadiri setiap sesi Parlimen. Anda mestilah meminta kebenaran secara tulisan daripada Whip Parti atau Timbalan Whip untuk memohon cuti sekiranya anda perlu meninggal semasa sesi parlimen. Secara berasingan, anda mesti tetap berada di Dewan Parlimen jika Rang Undang-Undang atau usul yang sedang anda bentang atau telah anda bentang, sedang berlangsung. Parti juga berharap agar Anggota Parlimen aktif di Dewan Parlimen, sering memfailkan Soalan-soalan Parlimen, selain mengemukakan idea dan pendapat berkaitan Rang Undang-Undang. Prestasi anda, kualiti keterlibatan anda dan keteraturan penyertaan anda di Parlimen akan diteliti oleh para pengundi.

14. Bacalah Akta Parlimen (Hak Keistimewaan, Kuasa dan Kekebalan), terutamanya peruntukan berkaitan penerimaan hadiah. Hubungi SG (Setiausaha Agung) atau Pengerusi Parti sekiranya timbul sebarang keraguan. Biasakan diri anda dengan Perlembagaan Republik Singapura dan Akta Pencegahan Rasuah.

15. Anda mungkin diundang untuk menyertai lawatan Parlimen atau lawatan rasmi ke luar negara untuk mewakili Parlimen Singapura atau majlis-majlis rasmi pemerintah yang lain. Anda amat digalakkan untuk menyertainya. Sentiasa sematkan dalam fikiran anda bahawa sebagai sebuah negara yang kecil, adalah penting bagi Singapura untuk bersatu-suara dan bersatu padu terutamanya di pentas antarabangsa. Berundinglah dengan wakil Pemerintah atau anggota-anggota parlimen yang lain mengenai kedudukan nasional serta ajukanlah soalan kepada SG (Setiausaha Agung) atau Pengerusi Parti jika ada keraguan, atau jika anda berasa kurang selesa untuk menyokong sebarang pendirian atau pendapat berkaitan perkara rasmi.

16. Mengesahkan semua penglibatan awam dan media, serta permintaan petikan atau pendapat kepada pihak media – sama ada atas talian atau luar talian – dengan Ketua Pasukan Media yang kemudiannya akan meminta kebenaran daripada SG (Setiausaha Agung) atau Pengerusi Parti untuk penyertaan anda.

Peranan anda sebagai seorang Anggota Parlimen Parti Pekerja
17. Mengesahkan semua penglibatan awam dan media, serta permintaan petikan atau pendapat kepada pihak media – sama ada atas talian atau luar talian – dengan Ketua Pasukan Media yang kemudiannya akan meminta kebenaran daripada SG (Setiausaha Agung) atau Pengerusi Parti untuk penyertaan anda.

18. Berfikirlah dengan teliti semasa anda mempertimbang untuk berucap di hadapan khalayak ramai jika diundang oleh organisasi tertentu. Sekiranya anda memilih untuk menerima jemputan tersebut dan Parti juga telah bersetuju dengan penyertaan anda, pertimbang kembali tujuan atau agenda utama anda menghadiri majlis tersebut dan fikirkan mesej utama yang anda ingin sampaikan kepada hadirin. Mesej yang anda ingin sampaikan mestilah selaras dan sesuai dengan pendirian yang dibawa oleh Parti dan berusahalah untuk mempromosikan imej Parti sebagai sebuah entiti yang rasional, terhormat dan bertanggungjawab dalam pentas politik Singapura. Hal ini secara tidak langsung dapat memperkuat kedudukan Parti Pekerja sebagai parti haluan kiri yang setia dan terunggul di tanah air. Anda juga perlulah merujuk kepada Ketua Pasukan Media sebelum menerima sebarang undangan untuk mendapatkan input yang lebih jelas dan mengelakkan terjadinya keraguan. Tanyakan pada diri anda apakah peranan organisasi dan/atau penyertaan anda dalam pelbagai cara boleh disalah ertikan, dipolitikkan atau dianggap tidak bersesuaian dengan imej Parti. Sekiranya perkara tersebut boleh terjadi, maka ia dianggap naif secara politik dan anda tidak patut meneruskannya.

19. Janganlah anda mengambil mudah dan mensia-siakan para sukarelawan akar umbi, sebaliknya selalulah berhubung dengan mereka. Perkara ini adalah kenyataan dalam dunia politik bahawa pada awalnya sukar untuk menilai niat seseorang yang menyertai perjuangan sesebuah Parti. Dapatkan panduan daripada kod tingkah laku sukarelawan, dan anda turut harus memimpin mereka dengan contoh teladan. Meskipun para sukarelawan cenderung mempunyai sifat yang ramah dan sentiasa menunjukkan sokongan padu terhadap anda, mereka juga akan memerhatikan kemampuan kepimpinan dan setiap gerak geri yang anda ambil dengan penuh teliti – sama ada anda lebih berminat dengan kedudukan anda sebagai seorang Anggota Parlimen dan lebih cenderung ke arah meningkatkan prestasi diri? Atau adakah anda seorang anggota Parlimen sebenar yang sanggup meluangkan masa serta titik peluh anda untuk berkhidmat kepada masyarakat serta segera memberikan maklum balas dan sentiasa mempunyai inisiatif dalam menangani permasalahan yang terjadi? Sudah pasti bahawa Anggota Parlimen Parti Pekerja yang bersikap seperti situasi yang pertama tidak akan kekal memegang jawatan ini.

Sesi Bertemu Rakyat dan komunikasi dengan penduduk
20. Salah satu aktiviti yang perlu disertai sepanjang perkhidmatan anda termasuklah sesi bertemu rakyat, anda juga mungkin akan bertemu dengan individu yang mengemukakan kekurangan dalam dasar-dasar pemerintah. Janganlah terlalu awal membuat kesimpulan. Anda haruslah mendapat maklumat sebanyak mungkin tentang sesuatu kes dan membuat pertimbangan yang tepat dalam menilai kes tersebut. Sebagai contoh, adakah anda sudah melakukan kajian yang cukup terhadap sebab-sebab dasar di sebalik sesuatu permasalahan yang timbul, bolehkah sesuatu dasar itu ditambah baik, bolehkah alasan luar/ekstrinsik dapat memperjelas perkara tersebut? dll. Perkara-perkara inilah yang sepatutnya terlintas di fikiran anda terlebih dahulu. Dalam beberapa kes yang lain, anda perlu memikirkan sekiranya diri anda atau pejabat kendalian anda dimanipulasi sebagai alat untuk merealisasikan minat atau kepentingan luaran pihak lain. Jangan pernah lupa bahawa anda hanya bertanggungjawab untuk memenuhi kepentingan Singapura dan warga Singapura sahaja. Meskipun begitu, tetaplah berfikiran terbuka semasa anda menangani masalah tersebut dengan penuh rasa empati, seperti yang diharapkan sebagai seorang Anggota Parlimen Parti Pekerja. Dapatkan kepercayaan pendudukan kawasan anda.

21. Anda tidak akan dapat memenuhi semua permintaan. Bersikap lurus dan jujurlah dengan penduduk di kawasan anda tanpa hilang rasa empati dan belas kasihan kepada mereka. Sekiranya anda tidak mempunyai jawapan yang jelas terhadap permasalahan yang diajukan oleh penduduk, beritahu mereka bahawa anda akan menyemak dan menghubungi mereka semula. Pastikan anda melaksanakan perkara tersebut.

22. Atas semangat dan komitmen anda untuk membantu penduduk atau menyuarakan sebarang isu dan masalah, anda hendaklah menunjukkan tauladan yang baik dengan sentiasa bersikap sopan dan profesional dalam menguruskan urusan anda dengan penjawat awam dan masyarakat. Anda juga mungkin perlu menulis kepada pemegang jawatan – atau kepada Anggota Parlimen daripada parti-parti yang lain – untuk memajukan kes yang berkaitan dengan mereka.

Pendekatan ‘Hammer’
23. Penjualan ‘Hammer’ adalah aktiviti Parti berpusat yang dilaksanakan lebih daripada setengah hari Ahad sepanjang tahun. Seorang Anggota Parlimen digalakkan untuk mengambil bahagian dalam aktiviti ini dan memimpin setiap ahli untuk menjual surat berita kepada orang ramai.

Kesimpulan
24.
Surat ini bertujuan untuk memberikan garis panduan dasar yang jika diikuti, mampu untuk memberikan anda asas untuk mencapai kejayaan dan memenuhi syarat-syarat kelayakan sebagai seorang Anggota Parlimen. Butiran yang terperinci berkaitan dengan perkara yang dibenarkan dan tidak dibenarkan dilakukan oleh seorang Anggota Parlimen tidak dapat dirumuskan dalam satu dokumen sahaja. Parti juga tidak berkemampuan untuk menyediakan manual yang lengkap bagi memastikan anda meraih kejayaan dan manfaat dalam penggal anda. Kejayaan atau kegagalan anda ditentukan sepenuhnya oleh profesionalisme, disiplin diri, dan komitmen asas serta keinginan yang anda berikan untuk mewakili suara warga Singapura dengan berkesan di Parlimen.

25. Semoga berjaya.

அறிமுகம்
1. நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக (எம்பி)
தேர்ந்தெடுக்கப்பட்டமைக்குப் பாராட்டுகள்.

2. நீங்கள் நாடாளுமன்றச் சத்தியப் பிரமாணம் எடுத்து, உங்களில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர மன்ற அதிகாரியாகப் பொறுப்புகளையும் கடமைகளையும் பழக்கப்படுத்திக் கொண்டுவிட்ட இத்தருணத்தில் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுவது பொருத்தமான நான் கருதினேன்.

3. நீங்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக மேற்கொள்ளும் அனைத்து பணிகளையும் உன்னதமான முறையில் நிறைவேற்ற ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் எழுதப்பட்டுள்ளது. தயவுசெய்து இதனை எப்போதும் மனதில் கொள்ளுங்கள். உங்களது பொதுச் சேவை பயணம் மிகச்சிலருக்கே கிடைக்கக்கூடிய அரும்பாக்கியம், குறிப்பாக எதிர்க்கட்சியுடன் நிற்கும் நம்மைப் போன்றவர்களுக்கு, என்பதை எப்போதும் எண்ணத்தில் நிலைநிறுத்துங்கள். உங்கள் பதவியை நீங்கள் மிகச்சிறந்த முறையில் பயன்படுத்துவீர்கள் என்றும், நீங்கள் படைத்த சாதனைகளை நினைத்து எதிர்காலத்தில் பெருமைகொள்ளும் வண்ணம் விடாமுயற்சியுடன் திட்டமிடுவீர்கள் என்றும் நம்புகிறேன். உங்கள் பதவிக்காலத்தை வலுப்படுத்திக்கொள்வதற்குக் கடின உழைப்பும் கட்டொழுங்கும் அத்தியாவசியம் என்பதை, நீங்கள் ஏற்கனவே உணராதிருந்தால், கூடிய விரைவில் உணர்வீர்கள்.

சுய மரியாதையுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்
4. பாட்டாளிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாளிக் கட்சியின் ஒரு தலைவரும் முக்கிய பிரதிநிதியும் ஆவார். இதை நீங்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது. நீங்கள் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினராக வாக்குகளைப் பெறவில்லை, பாட்டாளிக் கட்சியின் கொடியேந்தியாகவே வாக்குகளைப் பெற்றீர்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

5. நீங்கள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடத் தீர்மானித்தபோது, ஓர் உறுதிமொழியில் கையெழுத்திட்டீர்கள். நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், உங்கள் அரசியல் பணிக்கும் தொகுதிவாழ் மக்களுக்கு ஆற்றும் சேவைக்கும் முன்னுரிமை அளிப்பீர்கள் என உறுதிமொழியின் உட்கூறுகளில் ஒன்று குறிப்பிடுகிறது. இது நேர்முகமான உட்கூறாக இருந்தாலும், இதன்பால் உங்களுக்குள்ள கடப்பாடே உங்கள் தொகுதியிலும் நகர மன்றத்திலும் நீங்கள் வெற்றி அடைவீர்களா அல்லது தோல்வி அடைவீர்களா என்பதை நிர்ணயிக்கும். தேசிய நிலையில், அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளபடி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் சத்தியப் பிரமாணம் இதேபோன்ற கடமைகளையும் எதிர்பார்ப்புகளையும் விதிக்கிறது.

6. பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக உங்களுக்குள்ள கடப்பாட்டையும் மனப்பாங்கையும் உண்மையாகப் பிரதிபலிப்பது இணையத்தில் உங்களுக்குக் கிடைக்கும் “லைக்ஸ்”களின் எண்ணிக்கையோ, பகிர்வுகளோ அல்லது நேர்மறையான கருத்துகளோ அல்ல, நீங்கள் அடித்தளத்தில் செய்வதும் நாடாளுமன்றத்தில் சொல்வதும்தான். பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாரந்தோறும் நிறைவேற்றவேண்டிய குறைந்தபட்ச அடித்தள எட்டுதலுக்கான தரத்தைக் கட்சி வகுத்துள்து. வாராந்தர இல்ல வருகைகள்,
உங்கள் தொகுதியில் மேற்கொள்ளும் நடை உலாக்கள் ஆகியன இதில் உள்ளடங்கும். நீங்கள் முதல் தவணைக்கால நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்றிருந்து, உங்கள் தொகுதியில் கட்சியின் இருப்பை நிலைநாட்ட முற்பட்டால், இதற்குத் துணையாக மற்ற தொகுதிசார்ந்த பணிகளும் மேற்கொள்ளப்படவேண்டும். “அடித்தள நாடாளுமன்ற உறுப்பினராவதிலும்”, உங்கள் தொகுதிவாழ் மக்கள், சக சிங்கப்பூரர்கள் ஆகியோரின் பேரார்வங்களையும் அச்சங்களையும் பிரதிநிதிப்பதிலும் உங்களுக்குள்ள தனிப்பட்ட கடப்பாட்டையும் விழைவையும் பொறுத்தே உங்கள் முயற்சிகளில் பெரும்பகுதி அமையும்.

7. உங்களது பதவிக்காலம் ஆகச்சிறந்த முயற்சிகளுக்குத் தூண்டுகோலாக இருக்கவேண்டும் என நீங்கள் விரும்பினால், உங்களது செயல்பாடுகள் அனைத்திலும் துறைமைப் பொறுப்புடன் இருக்க விரும்புவதும் பொதுமக்களின் கூர்ந்தாய்வுகளை ஏற்க விழைவதும் அவசியம். உங்கள் பணிக்கு ஆதரவளிக்க ஒரு பில்லியன் வெள்ளி நிதியுள்ள அடித்தள அமைப்பு உங்களுக்கு இருக்காது. இதனை ஒரு பெருஞ்சுமையாகக் கருதி செயல்பாடின்மைக்குத் தள்ளப்படவோ, அல்லது அதைவிட மோசமாக, தொகுதியில் உங்களது தனிப்பட்ட ஈடுபாட்டுக்கும் கவனிப்புக்கும் உள்ள சக்தியைக் குறைத்து மதிப்பிடவோ கூடாது. உங்களது தொண்டூழியர்களுடன் சேர்ந்து அடித்தளப் பணிகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் தொகுதியில் உள்ள வீடுகளுக்கு வழக்கமான வருகைகள் மேற்கொள்ளுங்கள், கடைகளுக்கு நேரில் செல்லுங்கள். குடியிருப்பாளர்கள், உணவங்காடிக்காரர்கள், வணிக நிறுவனர்கள் ஆகியோரைத் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் தொகுதிவாசிகள் இதைவிடக் குறைவான தகுதியுடையவர்கள் அல்ல. ஆக முக்கியமாக, உங்கள் நகர மன்றத்தின் பணியைக் குடியிருப்பாளர்களிடம் தெரியப்படுத்தும் விதத்தில் அணுக்கமாகக் கவனம் செலுத்துங்கள். செயலின்மை, அலட்சியம் அல்லது இயங்காமை வலைக்குள் சிக்கிக்கொள்ளாதீர்கள். இல்லாவிடில், நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்றிருந்த தவணைக்காலத்தைப் பின்னோக்கிப் பார்க்கையில் வருத்தமும் தனிப்பட்ட ஏமாற்றமும் அடைவீர்கள்.

8. நகர மன்ற அதிகாரி என்ற முறையில், நீங்கள் பொது நிதிகளின் காப்பாளர். இதில் மிகுந்த கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருந்து, செலவினங்கள் அனைத்திற்கும் முறையான அங்கீகரிப்பு நடைமுறைகளோடும் கட்டுப்பாடுகளோடும் எழுத்துறுதி அளிக்கப்பட்டிருப்பதையும், நகர மன்ற நிதிநிலை விதிமுறைகளுக்கு உடன்பட்டிருப்பதையும் உறுதிப்படுத்துங்கள். அடித்தள நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், அடிக்கடி நகர மன்ற நிர்வாகத்தினர், அலுவலர்கள் ஆகியோருடனும், இடையிடையில் நகர மன்றத்தின் குத்தகையாளர்களுடனும் நீங்கள் தொடர்பு கொள்வீர்கள் என எதிர்பார்க்கப்படும். உங்களது சகர நகர மன்ற அதிகாரிகளுடன் சேர்ந்து, உங்கள் நகர மன்றத்திற்கு உயர் தரங்களை வகுத்திடுங்கள். ஊழல் தொடர்பான சட்டங்களை எப்போதும் கவனத்தில் கொண்டு, எந்தவொரு குத்தகையாளரின் தகாத வற்புறுத்தலுக்கும் அடிபணிந்துவிடாதீர்கள்.

நாடாளுமன்றம்
9. கட்சி எதுவாக இருந்தாலும், பின் இருக்கையரின் நோக்கம், பதவியிலுள்ள அரசாங்கத்தைக் கண்காணிப்பதாகும்.

10. ஆளும் கட்சி தோல்வியைக் கண்டு துவளப்போவதில்லை. ஏனெனில், ஒவ்வோர் இடத்தையும் வெல்லவே தேர்தலில் போட்டியிடுவதாக அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர். அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற விவாதத்தின்போது உங்களது நிலையையும் கருத்துகளையும் கூர்ந்தாராய உரிமை பெற்றவர்கள். மக்கள் செயல் கட்சியின் பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விறுவிறுப்பான கேள்விகளுடன் வெவ்வேறு கோணங்களில் அல்லது அம்சங்களில் உங்களைத் தாக்குவார்கள் என எதிர்பார்த்திருங்கள். நாடாளுமன்ற ஜனநாயகம் எதிர்வாதமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால், இதைவிடக் குறைவாக நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. மக்கள் செயல் கட்சியின் எண்ணிக்கை மேலோங்கியிருப்பதால், நாடாளுமன்றத்தில் நீங்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு சொல்லும் கூர்ந்தாராயப்பட்டு, நீங்கள் அல்லது கட்சி ஏற்கனவே சொன்னவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும் என எதிர்பாருங்கள்.

11. நாடாளுமன்றத்தின் நிலையான ஆணைகளைப் படித்துப்பார்த்து, எத்தகைய கேள்விகள் அனுமதிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக, உங்களது எதிராளிகள் நிலையான ஆணைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் பேசினால், குறிப்பிட்டதோர் ஆணை குறித்து தீர்ப்பளிக்குமாறு நாயகரை அணுகத் தயங்காதீர்கள். ஆனால், நிலையான ஆணைகள் உங்களுக்குப் பழக்கப்பட்டிருந்தால் மட்டுமே இதையெல்லாம் உங்களால் செய்யமுடியும். உங்களது நாடாளுமன்றக் கேள்விகளையும் உரைகளையும் தயாரிக்கும்போது அல்லது நாடாளுமன்றத்தில் விளக்கம் கேட்க எழும்போது, உங்களது சொந்த நோக்கங்கள் குறித்து உங்களிடமே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள் பதில் சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூரர்களின் நலன் மேம்பாடாக இருந்தால், அச்சமின்றி தொடருங்கள்.

12. உங்கள் பதவிக்காலம் ஒரு நெடுந்தொலைவு ஓட்டம். நிலையான செயல்பாடு இறுதி மதிப்பீட்டுக்கு முக்கியம். நமது அரசியல் எதிராளிகள் அடுத்த தேர்தலில் உங்களை வீழ்த்துவதற்காக, அல்லது ஏதாவதொரு வாய்ப்பு கிடைத்தால் பொதுமக்களின் பார்வையில் உங்கள் சுயமதிப்பைக் குறைப்பதற்காக, தங்கள் வசமுள்ள ஒவ்வொரு வளத்தையும் பயன்படுத்துவார்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். சமூக ஊடகத்தில் நேரடியாக, அல்லது மாற்றாள்களின் மூலமாக, மேற்கொள்ளும் தாக்குதலும் இதில் உள்ளடங்கும்.

13. நீங்கள் நாடாளுமன்ற அமர்வுகள் அனைத்திற்கும் வருகையளித்து, அமர்வு முழுவதும் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற அமர்வுக்கு இடையில் நீங்கள் வெளியேற வேண்டிய அவசியமிருந்தால், கட்சிக் கொறடாவிடம் அல்லது துணைக் கொறடாவிடம் எழுத்துபூர்வ அனுமதி பெறவேண்டும். இதுதவிர, நீங்கள் பேசவிருக்கும் அல்லது ஏற்கனவே பேசிய ஒரு மசோதா அல்லது தீர்மானம் விவாதத்திலிருக்கும்போது நீங்கள் அவையில் இருக்கவேண்டும். கட்சி தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஈடுபாடு கொள்ளவேண்டும் என்றும், அடிக்கடி நாடாளுமன்றக் கேள்விகளைத் தாக்கல் செய்யவேண்டும் என்றும், மசோதாக்கள் பற்றி பேசவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறது. உங்களது செயலாற்றல், உங்கள் குறுக்கீடுகளின் தரம், நாடாளுமன்றப் பங்கேற்பு ஆகியவற்றை வாக்காளர்கள் கூர்ந்து கண்காணிப்பார்கள்.

14. நாடாளுமன்றச் (சலுகைகள், அதிகாரங்கள், விதிவிலக்குகள்) சட்டத்தை, குறிப்பாக அன்பளிப்புகள் பெறுதல் தொடர்பான சட்ட விதிகளைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள். ஐயப்பாடு இருந்தால் தலைமைச் செயலாளரிடம் அல்லது தலைவரிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். சிங்கப்பூர் குடியரசின் அரசியலமைப்புச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றையும் நன்கு பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

15. சிங்கப்பூர் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்து அல்லது மற்ற அதிகாரத்துவப் பொறுப்புகளின் அடிப்படையில் நாடாளுமன்றப் பயணங்களில் அல்லது அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணங்களில் செல்ல நீங்கள் அழைக்கப்படலாம். இப்பயணங்களில் செல்ல நீங்கள் ஊக்குவிக்கப்படுகிறீர்கள். சிங்கப்பூர் ஒரு சிறிய நாடு என்பதால், அனைத்துலக அரங்கில் சிங்கப்பூர் ஒருமித்த நிலைப்பாட்டுடன் குரல்கொடுப்பது முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேசிய நிலைப்பாடு குறித்து அரசாங்கப் பிரதிநிதிகளிடம் அல்லது உங்கள் நாடாளுமன்றச் சகாக்களிடம் கலந்துபேசுங்கள். ஐயப்பாடு இருந்தால், அல்லது அதிகாரத்துவ நிலைப்பாட்டை ஆதரிப்பது சங்கடமாக இருந்தால், தலைமைச் செயலாளரிடம் அல்லது தலைவரிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

16. ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, முறைப்படியான / முறைப்படியல்லாத சந்திப்புகளுக்கும் கலந்துரையாடல்களுக்கும் வெளிநாட்டுத் தூதரகங்கள் அல்லது அவற்றின் பிரதிநிதிகள் உங்களை அழைக்கக்கூடும். இத்தகைய அழைப்புகளை ஏற்பதற்கு முன்பாக, நீங்கள் தலைமைச் செயலாளரிடம் அல்லது தலைவரிடம் எழுத்துபூர்வமாகத் தெரியப்படுத்த வேண்டும்.

பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக நீங்கள் பதிக்கும் முத்திரை
17. இணையம்வழியான அல்லது இணையம்வழி அல்லாத பொது உரைகள், ஊடகத்துடனான சந்திப்புகள், மேற்கோள் அல்லது கருத்து கேட்டு ஊடகத்தினர் செய்யும் கோரிக்கைகள் அனைத்திற்கும் ஊடகக் குழுவின் தலைவரிடம் அனுமதி நாடவேண்டும். ஊடகக் குழுவின் தலைவர் உங்கள் பங்கேற்புக்குத் தலைமைச் செயலாளரிடம் அல்லது தலைவரிடம் அனுமதி நாடுவார்.

18. ஏதாவதோர் அமைப்பின் அல்லது சங்கத்தின் அழைப்பின்பேரில் பொது உரை ஆற்றுவது பற்றி பரிசீலிப்பதற்குமுன் கவனமாகச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் அழைப்பை ஏற்க முடிவெடுத்து, கட்சியும் உங்கள் பங்கேற்புக்கு அனுமதி அளித்தால், உங்கள் நோக்கத்தையும் பார்வையாளர்களிடம் எடுத்துச்சொல்ல விரும்பும் முக்கிய கருத்துகளையும் நன்கு பரிசீலனை செய்யுங்கள். இந்தக் கருத்துகள் கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஒத்துப்போவதோடு, சிங்கப்பூர் அரசியலில் கட்சியைப் பகுத்தறிவுமிக்க, மதிப்புக்குரிய, பொறுப்பான அமைப்பாக எடுத்துக்காட்டவும், விசுவாசமுள்ள எதிர்க்கட்சியாகப் பாட்டாளிக் கட்சியின் நிலைப்பாட்டை வலுப்படுத்தவும் துணைபுரியவேண்டும். ஐயப்பாடு இருந்தால், கருத்துக்கான எந்தவோர் அழைப்பையும் ஏற்பதற்கு முன்பாக ஊடகக் குழுவின் தலைவரிடம் கலந்தாலோசனை செய்யுங்கள். அமைப்பின் மற்றும்/அல்லது உங்கள் பங்கேற்பின் முத்திரைக்குத் தவறான அர்த்தம் காணப்படுமா, அரசியலாக்கப்படுமா அல்லது மேம்போக்கானதாகக் கருதப்படுமா என உங்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். அப்படியிருந்தால், அது அரசியல் அறிவீனமாகவும், பொறுப்பற்ற செயலாகவும் இருக்கக்கூடும்.

19. உங்கள் அடித்தளத் தொண்டூழியர்களை மெத்தனமாகக் கருதாமல், அவர்களை அடிக்கடி ஈடுபடுத்துங்கள். கட்சியின் கொள்கையை ஆதரிக்க முன்வருபவர்கள் உண்மையானவர்களாக என்பதை எடுத்தவுடனே உறுதிப்படுத்திவிட முடியாது என்பது அரசியலின் இயல்பு. தொண்டூழியரின் நன்னடத்தை விதிமுறைகளை வழிகாட்டியாகக் கொண்டு, உங்கள் பங்கிற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து அவர்களை வழிநடத்துங்கள். தொண்டூழியர்கள் நட்பாகவும் ஆதரவாகவும் இருந்தாலும், உங்களிடம் தலைமைத்துவத்தை எதிர்பார்த்து, உங்கள் செயல்பாடுகளை அணுக்கமாகக் கவனிப்பார்கள் – உங்கள் கவனம் நாடாளுமன்ற உறுப்பினராக உயர்த் தகுதியடைவதிலும் தனிப்பட்ட செல்வாக்கை வளர்த்துக்கொள்வதிலும் அதிகமாக இருக்கிறதா? அல்லது சமூகத்தில் உங்களைப் பதித்துக்கொள்ள நேரமும் முயற்சியும் செலவிட்டு, குடியிருப்பாளர்களின் பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகண்டு, பிரச்சனைகளைக் கண்டறிவதில் முனைப்பு காட்டும் உண்மையான அடித்தள நாடாளுமன்ற உறுப்பினரா? ஐயப்பாட்டைத் தவிர்க்க, முந்திய பிரிவின்கீழ் வரும் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு நாடாளுமன்றத்தில் இடமில்லை என்பது திண்ணம்.

மக்கள் சந்திப்பு கூட்டங்களும் குடியிருப்பாளர்களுடனான கருத்துப் பரிமாற்றமும்
20. உங்கள் பணியின்போதும், மக்கள் சந்திப்பு கூட்டங்களின்போதும், அரசாங்கக் கொள்கைகளில் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டும் தனிமனிதர்களை நீங்கள் சந்திக்கக்கூடும். அதைக் கேட்டு எந்த முடிவுக்கும் வந்துவிடாதீர்கள். முதலில் அந்த விவகாரம் பற்றி உங்களால் முடிந்த அளவுக்கு விவரமறிய முயற்சி செய்யுங்கள். அதோடு, அந்த விவகாரத்தை நியாயமான முறையில் மதிப்பிடுங்கள். உதாரணமாக, அந்த விவகாரத்தின் பின்னணியிலுள்ள கொள்கை காரணங்களை நீங்கள் போதிய அளவு விசாரித்துவிட்டீர்களா, அந்தக் கொள்கையை மேம்படுத்த முடியுமா, உள்ளார்ந்த காரணங்களால் அவ்விவகாரத்திற்கு விளக்கமளிக்க முடியுமா? போன்ற சிந்தனைகள் உங்கள் மனதில் எழவேண்டும். சில விவகாரங்களில், புற நோக்கத்தை அல்லது நாட்டத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக நீங்கள் அல்லது உங்கள் பதவி தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் நீங்கள் யோசித்துப் பார்க்கவேண்டும். நீங்கள் சிங்கப்பூரின், சிங்கப்பூரர்களின் நலனுக்காகச் சேவை செய்கிறீர்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. எது எப்படி இருந்தாலும், பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மீதான எதிர்பார்ப்பிற்கேற்ப, அவ்விவகாரத்திற்குப் பச்சாதாபத்துடன் தீர்வு காண்கையில் திறந்த மனப்பான்மையை நிலைநாட்டுங்கள். உங்கள் குடியிருப்பாளர்களின் நம்பிக்கையை ஈட்டுங்கள்.

21. உங்களால் எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்ற இயலாது. பச்சாதாபத்தையும் பரிவையும் இழந்துவிடாமல், குடியிருப்பாளர்களிடம் நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்து கொள்ளுங்கள். ஒரு குடியிருப்பாளரின் கோரிக்கைக்கு உங்களிடம் பதில் இல்லாவிட்டால், அதுபற்றி விசாரித்துவிட்டுச் சொல்வதாக அவரிடம் கூறுங்கள். சொன்னபடி தவறாமல் செய்யுங்கள்.

22. ஒரு குடியிருப்பாளருக்கு உதவி புரியும் அல்லது ஒரு விவகாரத்தை முன்னெடுத்துச் செல்லும் உங்கள் உத்வேகத்திலும் கடப்பாட்டிலும், அரசாங்க அதிகாரிகளையும் பொதுமக்களையும் கையாளுகையில் பணிவன்பாகவும் துறைமைப் பொறுப்போடும் நடந்துகொள்ளுங்கள். ஒரு விவகாரத்தைச் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல, பொறுப்பதிகாரிகளுக்கு அல்லது மற்ற கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நீங்கள் கடிதம் எழுத வேண்டியிருக்கும்.

மக்களைச் சென்றடையும் சுத்தியல்
23. சுத்தியல் (Hammer) வெளியீட்டின் விற்பனை கட்சியின் மத்திய நடவடிக்கையாகும். ஆண்டு முழுவதும் பாதிக்கும் மேலான ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் இந்நடவடிக்கை நடைபெறும். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இந்நடவடிக்கையில் பங்கெடுத்து, கட்சியின் செய்திக்கடிதத்தைப் பொதுமக்களிடம் விற்பனை செய்ய உறுப்பினர்களை வழிநடத்திச் செல்லவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முடிவுரை
24. இந்தக் கடிதம் ஓர் அடிப்படை வரையறையை வழங்கும் நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றி நடந்தால், ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிகரமான, மனநிறைவான பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்வதற்கான அடிப்படை உங்களுக்கு அமையும். பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை அனைத்தையும் எந்தவோர் ஆவணத்திலும் ஒன்றுவிடாமல் துல்லியமாக உள்ளடக்க இயலாது. உங்கள் பதவிக்காலம் வெற்றிகரமாகவும் பயனுள்ளதாகவும் அமைவதை உறுதிப்படுத்தக்கூடிய வழிகாட்டியையும் எந்தவொரு கட்சியாலும் வழங்க இயலாது. அடித்தள முனைப்புகளில் நீங்கள் காட்டும் சுயக் கட்டொழுங்கு, கடப்பாடு, துறைமைப் பொறுப்பு ஆகியனவும், நாடாளுமன்றத்தில் செயலாற்றலுடன் சிங்கப்பூரர்களைப் பிரதிநிதிக்கவேண்டும் என்ற உங்கள் விருப்பமும்தான் உங்கள் வெற்றியை அல்லது தோல்வியை நிர்ணயிக்கும்.

25. உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.